Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

நினைவில் நிற்பவை

எழில்நிலா 10 ஆண்டுகள் நிறைவு!

ஜூலை 14, 2007 உடன் ‘எழில்நிலா’ வலைத்தளம் தனது 10 ஆவது ஆண்டை நிறைவு செய்கின்றது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் (1997) ஒரு தமிழ் வலைத்தளத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எனது ஆவலை நிறைவு செய்ய எனக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் உற்சாகத்தையும் வழங்கிய அறிஞர்கள், கணிஞர்கள் அனைவரையும் நினைவுகூருகின்றேன்.

ஆரம்பத்தில் எனக்கு முரசு அஞ்சலை உதவி பல தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வழங்கிய திரு.முத்து நெடுமாறன் என்றுமே மறக்க முடியாத நண்பர்.
ஆரம்ப காலங்களில் எனது தமிழ் வலைத்தளத்தை பல வழிகளிலும் சோதனை செய்து ஆலோசனைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்கிய திரு.பழனி, திரு.சிங்கை கிருஷ்ணன், திரு.மணியம், திரு.பாலாபிள்ளை இவர்களையும் நான் இன்னும் மறந்துவிடவில்லை.

அஞ்சலிலிருந்து திஸ்கி (TSCII) பின்னர் ராப் (TAB) போன்ற குறியீட்டு மாற்றங்களை ஏற்படுத்திய நேரங்களில் தொழில்நுட்ப உதவிகளையும் செயலிகள், எழுத்துருக்கள் உதவிய திரு.குமார் மல்லிகார்ஜுனன், திரு.சிறீவாஸ், திரு.மணி மணிவண்ணன், திரு.முகுந்ராஜ், மறைந்த நண்பர் உமர் இவர்களையும் இன்னும் பெயர் குறிப்பிடாமல்விட்ட மற்றைய நண்பர்கள் அனைவரையும் இத்தருணத்தில் நன்றியுணர்வுடன் நினைவுகூருகின்றேன்.

எழில்நிலா வலைத்தளம் அடிக்கடி புதிப்பிக்கப்படாமலிருந்தும் பல புதிய வலைவாசிகள் அங்கு சென்று கணிப்பொறி சம்பந்தமான கட்டுரைகளையும் மற்றும் பல ஆக்கங்களையும் படித்துப் பயன்பெறுகின்றார்கள் என்பதனை எனக்கு வரும் அஞ்சல்கள் மூலம் அறிந்து பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

எழில்நிலாவில் இடம்பெற்றிருக்கும் ஆக்கங்களை நல்கிய நண்பர்கள் அனைவரையும் மிக்க நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

ஜூலை 14, 2007

-0-0-0-

அன்பர்களின் வாழ்த்துக்கள் சில..

அன்பு நண்பர் மகேன்,
எழில் நிலாவிற்கு 10 வயது ஆவதில் பெரும் மகிழ்ச்சி.
அதன் வளர்ச்சிக்கு உதவியர்களை இத்தருணத்தில் நீங்கள் நினைவுகூருவது உங்களின்
நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது. பாராட்டுக்கள். மேலும் எழில்நிலா வளர்ந்து பூர்ண நிலையை அடையட்டும்.

அன்புடன்
பழனி
சிங்கப்பூர்

-0-

அன்புள்ள திரு. மகேன் அவர்களுக்கு,
வணக்கம்.
நீண்ட நாட்களுக்கு பின் தங்கள் மடல் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
பத்து ஆண்டுகள் பஞ்சாய் பறந்த அதிசயத்தை எண்ணிப்பார்க்கிறேன்.

இணையத்தில் நமது கட்டுரைகளை தங்கள் ‘எழில் நிலா’ பக்கத்தில் வெளியிட்டு உலகின் பல பகுதியிலிருந்து முகம் தெரியா அன்பர்கள் தனி மடல் எழுதி விளக்கமும், நன்றியும் தெரிவித்து வந்துள்ளார்கள், தெரிவித்தும் வருகிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கூட அஸ்திரேலியாவிலிருந்து கோவில் கும்பாபிஷேகம் மலருக்கு கட்டுரை கேட்டு இருந்தார்கள். அதன்போதும் தங்கள் நினைவு நிழலாடியது.

என்றும் முழு நிலவாக, எழில் நிலவாக, பெளர்ணமி நிலவாக, பூர்ண நிலவாக இருந்து உலக மக்களுக்கு இன்பம் அளிக்க வேண்டி விழைகிறேன்.

நன்றி,வணக்கம்
என்றும் தங்கள் அன்பில்.
கிருஷ்ணன்,
சிங்கை

எழில்நிலாவுக்கு என் வாழ்த்துகள்.

-0-

கவிஞர் புகாரியின் கவிதை நூல் ‘அன்புடன் இதயம்’ இணையத்தில் வெளியிட்ட முதல் நிகழ்வை
முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக்கியது நினைவில் வருகிறது. நான் தமிழுலகத்திற்கு கொஞ்சம் தாமதமாக வந்த நபர். அதன் பின் நிலாவைத் தொடர்ந்து வாசித்து வந்தேன். இப்போது..? ஆல்பர்ட், இலண்டன் சிவா, மாலன் .. ம்ம்ம்ம்..
கூடவே ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்..’ வரிகள் தான் நினவுக்கு வருகிறது.
உங்கள் பணி தொடர வாழ்த்தும்,

புதியமாதவி,
மும்பை

-0-

அன்பின் மகேன் அவர்களுக்கு

‘எழில்நிலா’ வலைத்தளத்திற்கு 10 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அன்புடன்
சிறீதரன்

-0-

எழில் நிலா பற்றி குறிப்பிட வேண்டுமானால் எனக்கு இணையத்தமிழில் நான் குருவாக மதிக்கும் திரு நெடுமாறன் அவர்கள் முதலில் என் நினைவிற்க்கு வருகிறார்.
மேடையில் தமிழ் தமிழ் என்று முழக்கமிட்டு கீழே இறங்கியதும்.

மாறிவிடும் சில தமிழக தமிழ் உணர்வாளர்கள் மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு,
கீழ இறங்கை போனதுமே சொன்ன தெல்லாம் போச்சு.
காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு
கணக்கில்லாமல் பேசு உனக்கும் கூட ஓட்டு,
சிரிப்பு வருது சிரிப்பு வருது நினைக்க நினைக்க சிரிப்பு வருது. (ஆண்டவன் கட்டளை. சந்திர பாபு பாடியது)
மத்தியில் மலேசியாவில் இருந்து கொண்டு இணைய தமிழுக்காக அவர் செய்த சேவை நினைவில் வருகிறது. மேலும் தமிழுக்காக செவை செய்யும் எழில் நிலா போண்ற‌ இணையங்களில் தமிழ் எழுத்துரு மலர காரணமாக இருந்த மேலும் பலரையும் இந்த தருனத்தில் வாழ்த்த கடமைப் பட்டுள்ளேன்.
ஏனென்றால் நான் 2001 ஆண்டு அக்டோபர் மாதம் 10 தேதி இரவு பணியின் போது தமிழ் என்று தேடு பகுதியில் தேடியதும் கிடைத்தது முதலில் எழில் நிலா தான். அதை எப்படி உருவாக்கினார் என்று மேலும் தேடியபோது, கிடைத்தவர்தான் இணைத்தமிழ் வித்தகர். திரு நெடுமாரனை பற்றி அவர்கள் 2005 ஆம் ஆண்டு மும்பை த‌மிழ் டைம்ஸில் வெளிட்டிருந்தேன். அத‌ற்ககுக் காரண‌மாக‌ இருந்த‌ த‌மிழ் டைம்ஸ் ப‌ததிரிக்கையாள‌ர் திரு இள‌ங்கோ அவ‌ர்க‌ளையும் இத்த‌ருன‌த்தில் நினைவு கூருகிறேன்.
10 ஆண்டுக‌ள் க‌ட‌ந்து பொலிவுட‌ன் திக‌ழும் எழில் நிலா ம‌கேன் அவ‌ர்க‌ளின் த‌மிழ் தொண்டு மேலும் சிற‌ந்து விள‌ங்க‌ ஒரு மும்பை த‌மிழனின் வாழ்த்துக்க‌ள்!

சரவணன் ராஜேந்திரன்.

-0-

மகேன்,

தொடர்ந்து பத்தாண்டுகள் இயங்கியதுபோல இன்னும் இயங்க வாழ்த்துக்கள்!

-/இரமணி

-0-

Dear Mahen,

Congratulations. That EzhilNila.com is completing 10 years and marching forward is a significant news. It is also a reminder to us that significant Tamil computing is more than a decade old.

The first TamilNet conference was held during 17-18 May 1997 in Singapore, chaired by amarar Naa Govindasamy, National Institute of Education, Singapore. Significantly, efforts started at that
conference as well as at the U. C. Berkeley Tamil Chair conference to standardize Tamil encoding schemes that led to the discussions in the webmasters@tamil.net mailing list leading to the creation of TSCII encoding among other things.

The hope of those trying to standardize the encodings was to promote the creation and growth of Tamil based content sites such as EzhilNila.com. As one of the pioneers that witnessed this growth and is a part of the early Tamil internet history, EzhilNila Mahen deserves our hearty congratulations and best wishes.

Regards,

Mani M. Manivannan
Founder, TSCII.ORG

-0-

அன்பினிய நண்.மகேன்,

‘எழில்நிலா’ வலைத்தளம் தனது 10 ஆவது வருடத்தை நிறைவு செய்வது அறிந்து மிக மகிழ்ச்சி. எந்தவித பிரதிபலனும் இல்லாமல் ஒரு வலைத்தளத்தை நடாத்துவது எளிதான விடயமல்ல.
அந்த வகையில் சாதனை நிகழ்த்தியுள்ள தங்களுக்கு எனது மனமார்ந்த
பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
ஆல்பர்ட்.

-0-

அன்புள்ள மகேன்,

எழில்நிலாவின் எழிச்சிமிகு 10 ஆண்டுகால வளர்ச்சி தமிழுக்கு உரம் சேர்க்கும் அரிய முயற்சிக்குத் தமிழகம் ஆதரவு. தங்கள் முத்தான முயற்சிகளுக்கு தமிழர் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். எடுத்துக் கொள்ளும் பொருளின் அனைத்து பரிமாணங்களையும் வழங்கி வருவது சிறப்பான அம்சம்.
நான் தங்களுக்கு அடிக்கடி எழுத முடியவில்லை என்றாலும் தொடர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துக்கள்

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

-0-

நண்பர் மகேனுக்கு,

தாங்கள் உருவாக்கிய இணையத்தளம் 10 ஆண்டு வயாதாகிவிட்டதைக் கேட்டு மகிழ்வடைகிறேன். தங்களது முயற்சிக்கும், உழைப்புக்கும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இணைய தளத்தையோ அல்லது வலைப்பூவையோ பராமரித்து, புதுப்பித்து, பயனுள்ள தகவலை இடமிடுத்தி வைப்பது என்பது சாமான்ய காரியமல்ல. பலர் இணைய தளங்களையும் வலைப்பூக்களையும் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் சில வருடங்களில் அவற்றை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
எழில் நிலா தளத்தில் பல பயனுள்ள கட்டுரைகளும், குறிப்புகளும், மென்பொருட்களும் , செய்முறை விளக்கங்களும், சுட்டிகளும் உள்ளன.

இந்த தளம் நெடுவருடங்கள் வாழ நான் வாழ்த்துகிறேன்.

இண்டி ராம்

-0-

அன்பின் மகேன்:

பத்தாம் ஆண்டு காணும் எழில்நிலா தளத்தை தயாரித்து பேணி வருவதில் மிக்க மகிழ்ச்சி.
இதில் உள்ள கட்டுரைகள் சிறப்பாகவும் தகவல் நிறைந்தும் உள்ளன.

உங்களுக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள் !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

-0-

அன்பின் மகேன் அவர்களுக்கு,

தங்களது அன்பு மகள் எழில்நிலாவுக்கு 10 வயது கடக்கிறது என்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைவதுடன், மகளின் அறிவையும் அழகையும் வாழ்த்தி மகிழும் அனைத்து உள்ளங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.
வளர்ச்சியின் ஏணிப்படிகளில் ஏறிச் செல்லும்போது, பின்னே திரும்பி, ஏணியைப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள், ஏணியைத் தந்துதவியவர்கள், ஏறுபவர் தடம்புரண்டால் தாங்குவதற்காய்க் காத்திருப்பவர்கள் என்று இன்னோரன்ன அத்தனை பேரையும் மறந்து போவது மனித இயல்பு. அதிலிருந்து முற்றாக விலகிக்கொண்டு, அத்தனை பேரையும் பெயர்சொல்லி நினைவு கூர்ந்திருப்பது தங்கள் மிகப்பெரிய பண்பைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள்.
எழில்நிலா இன்னும் பலமடங்கு வளமும் புகழும் திறனும் பிரபல்யமும் பெற, எழில்நிலாவின் ரசிகன் என்ற வகையில் மீண்டும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
குயின்ரஸ் துரைசிங்கம்
ரொறன்ரோ, கனடா.

-0-

அன்பின் நண்பருக்கு,

வணக்கம்

தங்களின் எழில்நிலாவிற்கு வயது 10 பூர்த்தியாவதறிந்தேன் மிக்க மகிழ்ச்சி .
தொடரட்டும் தங்களது தமிழ் பணி . ஒருங்குறி இதழ்களின் முன்னோடியாகவும்,சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் எழில்நிலாவின் பணி சிறக்கவும் தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சங்கமம் விசயகுமார்